உலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்று மேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. சமகாலத்தில் வாழ்ந்த அத்தனை முக்கியத் தலைவர்களையும் ஸ்டாலின் ஒழித்துக் கட்டியதாகவும் களையெடுப்பு எனும் பெயரில் தனது அரசியல் எதிரிகளை மொத்தமாக அழித்தொழித்ததாகவு ம் குற்றம் சுமத்துகின்றன.