மாபெரும் திட்டங்களை, மிகப் பெரிய கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறீர்களா? திறமை,உழைப்பு, விடாமுயற்சி அத்தனையும் இருந்தும்,குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாதபடி ஏதோ ஒரு முட்டைப்பூச்சி இம்சிக்கிறதா? ஆம் எனில் இந்தப் புத்தகம் உங்களுக்குத்தான்.
பிறருக்கு ஆர்வம் ஏற்படும்படி பேசுவது எப்படி? தர்மசங்கடமான சூழ்நிலைகளை எப்படிச் சமாளிப்பது? மேடையில் எப்படிப் பேசுவது? குடும்பத்தினரிடம்? மேலாளரி டம்? தகவல் பரிமாற்றத்தின் போது ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன? அவற்றை எப்படிக்களைவது? அத்தனைக் கேள்விகளுக்கும் இந்நூலில் விடை உண்டு.
நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால்.
இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. உங்களின் ‘இந்த விநாடி’ யை அர்த்த முள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உதவுகிறது. அதன் மூலம் உங்கள் அடுத்த விநாடி தொடங்கி வெற்றிப் பாதையில் நடைபோட வழிகாட்டுகிறது. தமிழில் இதுவரை வெளிவான வெற்றி நூல்களின் வரிசையில் இது மிகவும் மாறுபட்ட ஒரு நூல். ஏனெனில் இவை அனைத்துமே நிரூபிக்கப்பட்ட, எளிமையான வெற்றிமுறைகள்!