99% உழைப்பு 1% உள்ளுணர்வு என்று உழைப்பே, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்த கதாநாயகன் தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கையை விளக்குகிறது இந்நூல்.
‘பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது? பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன? அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள்?
இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. உங்களின் ‘இந்த விநாடி’ யை அர்த்த முள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உதவுகிறது. அதன் மூலம் உங்கள் அடுத்த விநாடி தொடங்கி வெற்றிப் பாதையில் நடைபோட வழிகாட்டுகிறது. தமிழில் இதுவரை வெளிவான வெற்றி நூல்களின் வரிசையில் இது மிகவும் மாறுபட்ட ஒரு நூல். ஏனெனில் இவை அனைத்துமே நிரூபிக்கப்பட்ட, எளிமையான வெற்றிமுறைகள்!
அறிஞர் அண்ணாவின் வாழ்வையும் பணியையும் இன்றைய தலைமுறைக்கு மறு அறிமுகம் செய்வதே இந்நூலின் நோக்கம். மிகச்சுருக்கமாக எழுதப்பட்டிருப்பினும் இவ்வாழ்க்கை வரலாறு, ஒரு கடலை விழுங்கிய குடம்
குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்த பாகிஸ்தானின் அரசியல் வரலாறு. முகம்மதலி ஜின்னா தொடங்கி பர்வேஸ் முஷாரஃப் வரை நீளும் பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம் குறித்த துல்லியமான அறிமுகம் இதில் கிடைக்கிறது.
இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து,