‘காஞ்சனை’ தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், ‘பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு’ என்பார். அப்படி பாரதக் கதையை நடத்தி வைத்த கிருஷ்ணனது கதையை எடுத்துக் கொண்டு, இந்திராபார்த்தசாரதி அவர்கள் புதிய யுக்தியுடன் புதுமையான சுவையுடன் ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்கிற நாவலை எழுதியிருக்கிறார்.