மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சியாக உள்ளது. ‘தத்துவவாதிகள் இதுவரை உலகை வியாக்யானம் செய்து வந்துள்ளனர். ஆனால் செய்ய வெண்டிய பணியோ அதை மாற்றியமைப்பதுய என்று பிரகடனம் செய்த கார்ல் மார்க்ஸ், அத்தகைய ஒரு மாற்றுத்துக்கு வித்திட்டே மறைந்தார்.