சோம. வள்ளியப்பன் பங்குச்சந்தையை தூரத்தில் இருந்து பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். கையைச் சுட்டுவிடுமோ என்று பயந்தீர்கள். உங்கள் பயத்தைப் போக்க வந்தது 'அள்ள அள்ளப் பணம் - 1'. அடடா, இவ்வளவுதான் பங்குச்சந்தையா என்று பயம் நீங்கி உள்ளே நுழைந்தீர்கள். பங்குச்சந்தையில் பேசும் மொழி புரிய ஆரம்பித்தது. கொஞ்சம் பணத்தை முதலீடு செய்தீர்கள்.நிச்சயம் மேலே போகும் என்று எதிர்பார்த்த ஷேர்கள் கீழே இறங்கின. சில சமயம் மார்க்கெட்டே விழுந்தது. சரி, விற்றுவிடலாம் என்று நீங்கள் தீர்மானித்து, விற்றபிறகு மார்க்கெட் ஏறியது. நீங்கள் தடுமாறினீர்கள். கொஞ்சம் புரிவது போலும் இருந்தது, புரியாமலும் இருந்தது. எந்தப் பங்கை வாங்க வேண்டும், எதை வாங்கக் கூடாது? Fundamental Analysis உங்களுக்குச் சொல்லித்தரும். எப்பொழுது வாங்க வேண்டும்? எப்பொழுது விற்க வேண்டும்? எப்பொழுது வாங்கவோ, விற்கவோ கூடாது? Technical Analysis உங்களுக்குச் சொல்லித்தரும். பொருளாதாரம்? Macroeconomics தெரியாமல் தேர்ச்சி பெற்ற பங்கு வியாபாரியாக ஆவது இயலாது. இந்த மூன்றையும் எளிமையாக, உங்களுக்குப்பரியும் வகையில், இந்தப் புத்தகம் சொல்லித்தருகிறது!
Additional information
Weight | 210 g |
---|---|
Author | |
Publisher | |
ISBN | |
Edition | 2 |
Pages | 202 |
Print Year |
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.