Sale!

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0

225.00

Add to Wishlist
Add to Wishlist

ஐம்பதாயிரம் பிரதிகள் விற்ற “இட்லியாக இருங்கள் - எமோஷனல் இன்டெலிஜென்ஸ்” நூலின் இரண்டாம் பாகம். அறிவாற்றலை அளவிடும் ஐகி முறையை இப்போது ஒருவரும் பயன்படுத்துவதில்லை. அறிவுத்திறன் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும், மாபெரும் சாதனைகள் புரியமுடியும் என்னும் நம்பிக்கையும்கூட பெருமளவில் தகர்ந்துவிட்டது. இப்போது உலகை ஆண்டுகொண்டிருப்பது EQ எனப்படும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் மட்டுமே. உள்ளுணர்வுகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அவற்றைச் சரியான முறையில் கையாளும் கலையை யார் திறன்படக் கற்கிறார்களோ அவர்களே இன்று வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல படிப்பு, அலுவலகம், தொழில் என்று வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் EQ முக்கியமானதாக மாறுகிறது.

தலைமைப் பதவியை வகிக்கவேண்டுமா? போட்டியாளர்களைச் சமாளிக்கவேண்டுமா? கனவுகளை நினைவாக்கவேண்டுமா? நீங்கள் இயங்கும் துறையில் முதன்மைச் சாதனையாளராகத் திகழவேண்டுமா? உங்கள் சிந்தனைகள், செயல்பாடுகள் இரண்டிலும் ஆச்சரியமூட்டும் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டுமா? உங்களுடைய உகி திறனை மேம்படுத்திக்கொள்வதுதான் ஒரே அடிப்படை வழி. சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் IQ-வை விட ஏன் EQ முக்கியம் என்பதையும் அதை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதையும் முறைப்படி கற்றுக்கொடுக்கிறது. ‘குமுதம் சினேகிதி’ இதழில் வெளிவந்து ஏகோபித்த பாராட்டைப் பெற்ற வாழ்வியல் தொடரின் புத்தக வடிவம்.

Additional information

Weight 195 g
Author

Publisher

ISBN

Edition

1

Pages

216

Print Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0”