இஸ்ரோவின் கதை
₹157.50
சோற்றுக்கே வழி இல்லாத ஒரு நாட்டுக்கு ஆகாயக் கனவுகளெல்லாம் தேவைதானா என்று இகழ்ந்தவர்கள் அனைவரும் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போன கதையும்கூட.
இது இஸ்ரோவின் கதை. இது நம் தேசத்தின் கதை. நாம் ஒவ்வொருவரும் நம் இதயத்தில் பெருமிதத்தோடு ஏந்தி, கொண்டாடவேண்டிய ஒரு கதை. சோற்றுக்கே வழி இல்லாத ஒரு நாட்டுக்கு ஆகாயக் கனவுகளெல்லாம் தேவைதானா என்று இகழ்ந்தவர்கள் அனைவரும் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போன கதையும்கூட. ஆனால், விண்வெளி, ராக்கெட், சாட்டிலைட், சந்திரயான் போன்றவற்றையெல்லாம் எல்லோரும் புரிந்துகொள்ள முடியுமா என்றொரு சந்தேகம் உங்களுக்குத் தோன்றினால் அதை முற்றாகக் களைந்துவிட்டு இதைப் படிக்க ஆரம்பியுங்கள். இதைவிடவும் சுவையான நடையில், இதைவிடவும் எளிமையாக இஸ்ரோவின் கதையை வேறு யாராலும் சொல்லிவிடமுடியாது.
வானம் மட்டுமல்ல இந்நூலின் மையம், பூமியும்தான். சூழ்ச்சி, சூது, ஆரவாரம், அழுகை, தவிப்பு, தத்தளிப்பு, தோல்வி, வெற்றி, பரவசம், பரிதவிப்பு அனைத்தையும் உள்ளடக்கிய உணர்வுக்குவியலாக திரண்டு நிற்கிறது இந்நூல். தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் மோசடிகளைக் கண்டறியும் நிபுணராக ஐ.டி துறையில் பணியாற்றிவரும் ஹரிஹரசுதன் தங்கவேலு, அறிவியலையும் அரசியலையும் தொழில்நுட்பத்தையும் வரலாறையும் அழகாக இணைத்து இஸ்ரோவின் கதையை வண்ணமயமாக வரித்திருக்கிறார்.
ஒவ்வொரு இந்தியரின் கையிலும் இருக்கவேண்டிய புத்தகம்.
Additional information
Weight | 140 g |
---|---|
Author | |
Publisher | |
ISBN | |
Edition | 1 |
Print Year |
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.