வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பின் மனச்சாட்சி.
பிறருக்கு ஆர்வம் ஏற்படும்படி பேசுவது எப்படி? தர்மசங்கடமான சூழ்நிலைகளை எப்படிச் சமாளிப்பது? மேடையில் எப்படிப் பேசுவது? குடும்பத்தினரிடம்? மேலாளரி டம்? தகவல் பரிமாற்றத்தின் போது ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன? அவற்றை எப்படிக்களைவது? அத்தனைக் கேள்விகளுக்கும் இந்நூலில் விடை உண்டு.
நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால்.
க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும்.
பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சென்று ஆதிவாசி அருந்திய ஆகாரம் பற்றி எழுதவும் முடியும். உலகில் முதலில் தோன்றியது பெண். அதாவது ஆதாம் அல்ல ‘ஏவாள்’தான் என்கிறார்.
வாடிக்கையாளரைக் குறிபார்த்துச் சுண்டி இழுப்பது. அந்த விஷயத்தில் போட்டியாளர்களை முந்திக்கொண்டு தன்னைத் திணித்துக்கொள்வது. பிசினஸில் இது மிக முக்கியம். நீங்கள் ஏரோப்ளேன் விற்கிறீர்களா, எலி மருந்து விற்கிறீர்களா என்பது முக்கியமல்ல. என்ன விற்றாலும் அது நிறைய விற்கவேண்டும். லாபம் கொட்டோகொட்டென்று கொட்டவேண்டும்.
மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சியாக உள்ளது. ‘தத்துவவாதிகள் இதுவரை உலகை வியாக்யானம் செய்து வந்துள்ளனர். ஆனால் செய்ய வெண்டிய பணியோ அதை மாற்றியமைப்பதுய என்று பிரகடனம் செய்த கார்ல் மார்க்ஸ், அத்தகைய ஒரு மாற்றுத்துக்கு வித்திட்டே மறைந்தார்.