Sale!

மார்க்கெட்டிங் மாயாஜாலம்

175.00

Add to Wishlist
Add to Wishlist

வாடிக்கையாளரைக் குறிபார்த்துச் சுண்டி இழுப்பது. அந்த விஷயத்தில் போட்டியாளர்களை முந்திக்கொண்டு தன்னைத் திணித்துக்கொள்வது. பிசினஸில் இது மிக முக்கியம். நீங்கள் ஏரோப்ளேன் விற்கிறீர்களா, எலி மருந்து விற்கிறீர்களா என்பது முக்கியமல்ல. என்ன விற்றாலும் அது நிறைய விற்கவேண்டும். லாபம் கொட்டோகொட்டென்று கொட்டவேண்டும்.

இது ஒரு தாரக மந்திரம். உங்கள் கண்ணில் தென்படும் அத்தனை விஷயங்கள் மீதும் பரம்பொருள் போல் ஆதிக்கம் செலுத்தும் சக்தி. ஒரு வரியில் சொல்வதென்றால் பொருள்களை விற்கப் பயன்படும் உத்தி. பெட்டிக்கடை தோறும் பெப்ஸி போர்டுகளும் கொல்லைப்புறம் வரை கோககோலா தட்டிகளும் தென்படுவதன் பின்னால் உள்ள சூட்சுமம். ஹைவே முழுவதும் ஹட்ச் ஹட்ச் என்று நாய்க்குட்டி தும்மியபடி நம்மைப் பின் தொடர்வதன் பின்னணி. மொபைல் எதுக்கு? டாக் பண்ணுறதுக்கு என்று த்ரிஷா உயரே இருந்து கண்ணடித்துப் புன்னகை செய்வதன் தேவ ரகசியம்.

வாடிக்கையாளரைக் குறிபார்த்துச் சுண்டி இழுப்பது. அந்த விஷயத்தில் போட்டியாளர்களை முந்திக்கொண்டு தன்னைத் திணித்துக்கொள்வது. பிசினஸில் இது மிக முக்கியம். நீங்கள் ஏரோப்ளேன் விற்கிறீர்களா, எலி மருந்து விற்கிறீர்களா என்பது முக்கியமல்ல. என்ன விற்றாலும் அது நிறைய விற்கவேண்டும். லாபம் கொட்டோகொட்டென்று கொட்டவேண்டும்.

அதற்குத்தான் தேவை மார்க்கெட்டிங். மார்க்கெட்டிங் என்பது உங்கள் தொழிலில் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசம்.

உங்களுக்கு எது வேண்டும்? வெற்றிதானே?

அப்படியானால், யோசிக்காமல் இதைப் படியுங்கள். எம்.பி.ஏ., படித்தால்தான் மார்க்கெட்டிங் புரியும் என்பதில்லை. இந்தச் சிறு புத்தகம் போதும். உங்கள் வர்த்தகம் கொழிப்பதற்கான வழிமுறைகளை அள்ளித்தருகிறது!

சுய தொழில் புரிவோருக்கும், மிகப்பெரிய நிறுவனங்களில் மார்க்கெட்டிங் துறையில் வேலை தேடிக்கொண்டிருப்போருக்கும் - ஏன், கடைக்குப் போய் காசு கொடுத்து ஏதாவது வாங்கும் அத்தனை பேருக்குமே இது ஒரு அட்சய பாத்திரம்.

அள்ளிக்கொள்ளுங்கள் ஐடியாக்களை!

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா டெம்பிள் யுனிவர்சிடியில் எம்.பி.ஏ., படித்தவர். மெக்கான் எரிக்சன், முத்ரா போன்ற விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்தவர். கவின்கேர், கிரிக்கின்ஃபோ போன்ற நிறுவனங்களில் மார்க்கெட்டிங் துறையில் மேலாளராகப் பணிபுரிந்தவர். தற்போது பல தமிழக நிறுவனங்களுக்கு மார்க்கெட்டிங் ஆலோசகராகப் பணிபுரிகிறார். அத்துடன் IIPM சென்னை, ITM சென்னை, அம்ரிதா ஸ்கூல் ஆஃப் பிசினஸ், கோவை ஆகிய நிர்வாகவியல் கல்லூரிகளில் மார்க்கெட்டிங் துறையில் பாடங்கள் நடத்துகிறார்.

Additional information

Weight 195 g
Author

Publisher

ISBN

Edition

1

Pages

136

Print Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “மார்க்கெட்டிங் மாயாஜாலம்”